காராமணி சுண்டல்
தேவையான பொருட்கள்:
காராமணி – 1 கப்
வரமிளகாய் – 7
பெருங்காயத் தூள் – 2 சிட்டிகை
துருவிய தேங்காய் – 6 டேபிள் ஸ்பூன்
சீரகப் பொடி – 1 டீஸ்பூன்
எண்ணெய் – 4 டீஸ்பூன்
கடுகு – 1/2 டீஸ்பூன்
கறிவேப்பிலை – சிறிது
உப்பு – தேவையான அளவு
செய்முறை:
முதலில் ஒரு கடாயில் காராமணியை போட்டு வறுத்து, பின் அதனை ஊற வைத்துக் கொள்ள வேண்டும். பின் இதனை நன்றாக வேக வைத்துக் கொள்ள வேண்டும். ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, உளுத்தம் பருப்பு, வரமிளகாய், கறிவேப்பிலை, பெருங்காயத் தூள் , உப்பு மற்றும் வேக வைத்துள்ள காராமணியை சேர்த்து கிளறி துருவிய தேங்காய் , சீரகப் பொடி தூவி பிரட்டி இறக்கினால், காராமணி சுண்டல் ரெடி!!!