Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

சத்தீஸ்கரில் நக்சலைட்டுகள் தாக்குதல் – 2 காவலர்கள் சுட்டுக்கொலை; ஒருவர் காயம்!

சத்தீஸ்கரில் உள்ள பஸ்தார் மாவட்டத்தில் நக்சலைட்டுகள் நடத்திய தாக்குதலில் 2 காவலர்கள் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளனர்.

பஸ்தார் மாவட்டத்தில் நக்சலைட்டுகள் பதுங்கி இருப்பாக வந்த தகவல் படி சத்தீஸ்கர் ஆயுதப்படை காவலர்கள் மற்றும் சிஆர்பிஎப் வீரர்கள் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

அப்போது இரு தரப்பினருக்கும் நடந்த துப்பாக்கி சண்டையில் சத்தீஸ்கர் ஆயுதப்படையை சேர்ந்த 2 காவலர்கள் சுட்டு கொலை செய்யப்பட்டுள்ளனர். மேலும் இந்த தாக்குதலில் ஒரு சிஆர்பிஎப் வீரருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. அவரை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.

Categories

Tech |