பிகில் பட ஆடியோ விழாவில் நடிகை நயன்தாரா கலந்து கொள்வாரா ? என்ற கேள்விக்கு பதில் கிடைத்துள்ளது.
தமிழ் சினிமாவில் தனக்கென தனி முத்திரை பதித்தவர் லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படும் நயன்தாரா. நயன் நடிக்கும் படமெல்லாம் ஹிட் ஆகவில்லை என்றாலும், அவருக்குனே உள்ள தனி ரசிகர்கள் கூட்டம் படத்தை ஓட வைக்கும்.படம் குறித்த விழாவை பெரும்பாலும் தவிர்க்கும் நயன் விஜய்யுடன் நடிக்கும் பிகில் பட ஆடியோ விழாவில் கலந்து கொள்வாரா? மாட்டாரா?
என்கிற கேள்வி ரசிகர்களிடையே எழுந்தது. ஆனால் இந்த விழாவில் நயன்தாரா பங்கேற்பார் என்ற தகவல் ரசிகர்களை மகிழ்ச்சியடைய வைத்துள்ளது. இது விஜய் படம் என்பதாலே நயன் பங்கேற்பதாகவும் சொல்லப்படுகின்றது.