Categories
சினிமா தமிழ் சினிமா

நயன்தாரா இல்லனா திரிஷா… சிம்பு படத்துக்கு ஹீரோயின் தேடும் கௌதம் மேனன்…!!!

சிம்பு -கௌதம் மேனன் கூட்டணியில் உருவாகும் படத்தில் கதாநாயகியாக திரிஷா நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது .

தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் சிம்பு நடிப்பில் வெளியான ஈஸ்வரன் திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது . இதையடுத்து சிம்பு வெங்கட்பிரபு இயக்கத்தில் ‘மாநாடு’, படத்திலும் கிருஷ்ணா இயக்கத்தில் ‘பத்து தல’ படத்திலும் நடித்து வருகிறார் . இதைத் தொடர்ந்து இயக்குனர் கௌதம் மேனன் இயக்கும் படத்தில் சிம்பு நடிக்க இருப்பதாக சமீபத்தில் அறிவிப்பு வெளியானது . இது சிம்பு -கௌதம் கூட்டணியில் உருவாகும் மூன்றாவது படமாகும். இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார் . இந்த படத்திற்கான முதல் கட்ட பணிகள் தொடங்கியுள்ளது.

Image result for simbu gautham menon

முதல்கட்டமாக இந்த படத்தில் கதாநாயகியாக நயன்தாரா நடிக்க இருப்பதாக கூறப்பட்டது . ஏற்கனவே சிம்பு-நயன்தாரா கூட்டணியில் வல்லவன், இது நம்ம ஆளு போன்ற படங்கள் வெளியாகி இருந்தது . ஆனால் சிம்பு படத்தில் நடிக்க நயன்தாரா ஒப்புக் கொள்ளாதது போல் தெரிகிறது . இதனால் நடிகை திரிஷாவை இந்த படத்தில் கதாநாயகியாக நடிக்க வைக்க  படக்குழு அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. ஏற்கனவே சிம்பு- திரிஷா கூட்டணியில் வெளியான ‘விண்ணைத்தாண்டி வருவாயா’ திரைப்படம் சூப்பர் ஹிட் அடித்தது குறிப்பிடத்தக்கது . எனவே மீண்டும் இந்த ஜோடி இணையுமா? என்பது விரைவில் தெரியவரும்.

Categories

Tech |