தமிழ் திரையுலகின் லேடி சூப்பர் ஸ்டார் என்று ரசிகர்களால் அழைக்கப்படும் நயன்தாராவும் அவருடைய காதலரும் சாய் வாலே என்னும் நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளார்கள்.
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகையாகவும், ரசிகர்களால் லேடி சூப்பர்ஸ்டார் என்று அன்போடு அழைக்கப்படுபவருமாக நடிகை நயன்தாரா திகழ்கிறார். இவர் தற்போது ரஜினி நடித்து வரும் அண்ணாத்த திரைப்படத்தில் தன்னுடைய நடிப்பை வெளிப்படுத்தி வருகிறார்.
இதற்கிடையே நடிகை நயன்தாராவும், விக்னேஷ் சிவனும் காதலித்து வருகிறார்கள். இந்நிலையில் தற்போது இவர்கள் 2 பேரும் சாய்வாலே என்னும் நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளார்கள். இதனால் சாய் வாலே நிறுவனத்தின் முதலீட்டார்கள் பட்டியலில் விக்னேஷ் சிவனும், நயன்தாராவும் இடம் பெற்றுள்ளார்கள்.