நடிகை நயன்தாராவை பற்றி பேசி ராதாரவி மீண்டும் சர்ச்சையில் சிக்கிக்கொண்டார்.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நயன்தாரா. இவர் நடிப்பில் வெளியாகும் அனைத்து படங்களும் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வெற்றி பெறும். இந்நிலையில் கடந்த 2 வருடங்களுக்கு முன்பு நடிகை நயன்தாராவை பற்றி பேசி சர்ச்சையில் சிக்கி, திமுகவில் இருந்து விலக்கப்பட்ட நடிகரும், அரசியல் பிரமுகருமான ராதாரவி மீண்டும் நயன்தாரா குறித்து பேசியுள்ளார்.
தற்போது பிஜேபியில் இணைந்துள்ள ராதாரவி பிரச்சாரத்தின்போது கூறியதாவது, நயன்தாராவை பற்றி பேசியதால் திமுக கட்சி என்னை தற்காலிகமாக நீக்கியது. ஆனால் நான் முழுவதுமாக அக்கட்சியை விட்டு விலகிவிட்டேன்.
நயன்தாரா என்ன திமுக கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளரா? நயன்தாராவிற்கும் திமுகவிற்கும் என்ன உறவு இருக்கிறது? உதயநிதிக்கும் நயன்தாராவுக்கும் உறவு இருந்தால் அதற்கு நான் என்ன செய்வது என்று கூறியுள்ளார். இவரின் இந்த பேச்சு தற்போது கடும் சர்ச்சையாகி வருகிறது.