Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

முன்னணி ஹீரோவிற்கு தங்கையாகும் நயன்தாரா…. வெளியான புதிய தகவல்….!!!

முன்னணி ஹீரோவிற்கு நடிகை நயன்தாரா தங்கையாக நடிக்க உள்ளார் என்று தகவல் வெளியாகி உள்ளது.

தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் நடிகை நயன்தாரா. இவரது நடிப்பில் சமீபத்தில் ஓடிடியில் வெளியான நெற்றிக்கண் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இதை தொடர்ந்து இவர் அடுத்ததாக அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடிக்கும் படத்திலும் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

இந்நிலையில் மலையாளத்தில் ஹிட்டான லூசிபர் படத்தை தெலுங்கில் சிரஞ்சீவியை வைத்து ரீமேக் செய்கின்றனர். இந்த படத்தில் நடிகை நயன்தாரா சிரஞ்சீவிக்கு தங்கையாக நடிக்கிறார் என்று தகவல் வெளியாகி உள்ளது. மேலும் இப்படத்தில் நயன்தாராவுக்கு கணவராக நடிகர் சத்யதேவ் நடிக்கிறார் என்றும் தெரியவந்துள்ளது.

 

Categories

Tech |