Categories
சினிமா தமிழ் சினிமா

அஜித்துடன் இந்த படத்தில் நடிக்கும் வாய்ப்பை தவறவிட்ட நயன்தாரா…. நடிச்சிருந்தா வேற லெவல்….!!!

திருப்பதி படத்தில் முதலில் ஹீரோயினாக நடிக்க இருந்தவர் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவின் பிரபல முன்னணி நட்சத்திரங்களில் ஒருவராக வலம் வருபவர் அஜித். இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் ”வலிமை”. இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வெற்றியடைந்தது. தற்போது அஜீத் தனது 61வது படத்தில் நடித்து வருகிறார். இதனையடுத்து, இயக்குனர் பேரரசு இயக்கத்தில் இவர் நடிப்பில் கடந்த 2006 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ”திருப்பதி”.

விஜய்க்கு சந்தனம்... எனக்கு ரத்தமான்னு கேட்டார் அஜித்!"- `திருப்பதி'  நினைவுகள் பகிரும் பேரரசு | Director Perarasu talks about Thirupathi movie  with Ajith

இந்தப் படம் வெளியாகி 16 ஆண்டுகள் நிறைவடைந்து விட்டது. இதனால் இந்த படத்தின் இயக்குனர் சமீபத்தில் பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அதில், இந்த படத்தில் முதன் முதலில் சதாவிற்கு பதிலாக நயன்தாராவை தான் ஹீரோயினாக நடிக்க தேர்வு செய்து இருந்ததாக கூறியுள்ளார். அப்போது அவர் தெலுங்கு படத்தில் பிஸியாக இருந்த காரணத்தினால் நடிக்க முடியாமல் போனதாகவும் கூறியிருக்கிறார்.

Categories

Tech |