நயன்தாரா புதிய பிசினஸ் ஒன்றை தொடங்கியுள்ளார்.
தமிழ் திரையுலகில் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் நயன்தாரா. இவர் தொடர்ந்து பல திரைப்படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். இவர் இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து வருகிறார் என்பது அனைவரும் அறிந்த விஷயம். இதனையடுத்து, படங்களில் மட்டுமே கவனம் செலுத்தி வந்த இவர் தற்போது புதிய பிசினஸ் ஒன்றை தொடங்கியுள்ளார்.
அதன்படி, இவர் ”தி லிப் பாம்” என்ற நிறுவனத்தை தொடங்கியுள்ளார். இந்த நிறுவனத்தின் மூலமாக இவர் அழகு சாதனப் பொருட்கள் தயாரிப்பில் ஈடுபட உள்ளார். இந்த தகவலை அறிந்த ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் பலரும் அவருக்கு வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.