Categories
சினிமா தமிழ் சினிமா

ஓடிடியில் ரிலீசாகிறது நயன்தாராவின் ‘நெற்றிக்கண்’…. மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருக்கும் ரசிகர்கள்….!!!

நடிகை நயன்தாராவின் ‘நெற்றிக்கண்’ திரைப்படம் நேரடியாக ஓடிடில் வெளியாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழகம் முழுவதும் தற்போது கொரோனாவின் இரண்டாம் அலை வேகமாக வீசி வருகிறது. இதனால் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் திரையரங்குகளையும் மூட அரசு உத்தரவிட்டுள்ளது. இதனால் இன்னும் சில தினங்களில் திரையரங்குகளில் வெளியாக இருந்த திரைப்படங்கள் ஓடிடில் வெளியிட பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது.

அந்த வகையில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையான நயன்தாரா நடிப்பில் உருவாகியுள்ள ‘நெற்றிக்கண்’ திரைப்படம் நேரடியாக ஓடிடியில் வெளியாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ரவுடி பிக்சர்ஸ் சார்பில் விக்னேஷ் சிவன் தயாரித்துள்ள இப்படத்தை மிலிந்த் ராவ் இயக்கியுள்ளார். மேலும் இப்படத்தில் நயன்தாரா கண் பார்வையற்ற பெண்ணாக நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது. ஆகையால் இப்படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

Categories

Tech |