Categories
சினிமா தமிழ் சினிமா

நயன்தாராவின் “நெற்றிக்கண்”…. ரிலீஸ் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு….!!!

நயன்தாராவின் நெற்றிக்கண் திரைப்படம் நேரடியாக ஓடிடியில் ரிலீசாக இருப்பதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இயக்குனர் மிலிந்த் ராவ் இயக்கத்தில் லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘நெற்றிக்கண்’. திரில்லர் கதையம்சம் கொண்ட இத்திரைப்படத்தை நயன்தாரா மற்றும் விக்னேஷ் ஒன்றிணைந்து அவர்களது ரவுடி பிக்சர்ஸ் தயாரிப்பு நிறுவனம் மூலம் தயாரித்துள்ளனர்.

மேலும் கிருஷ் கோபாலகிருஷ்ணன் இசையமைத்துள்ள இப்படத்திற்கு கார்த்திக் கணேஷ் ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்நிலையில் நெற்றிக்கண் திரைப்படம் நேரடியாக ஓடிடியில் ரிலீசாக இருப்பதாக இப்படத்தின் தயாரிப்பாளர் விக்னேஷ் சிவன் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். மேலும் ரிலீஸ் தேதி குறித்து கூடிய விரைவில் அறிவிக்கப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

Categories

Tech |