தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வரும் நயன்தாரா கடந்த ஜூன் மாதம் 9-ம் தேதி இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிகளுக்கு சமீபத்தில் இரட்டை ஆண் குழந்தை வாடகைத்தாய் முறையில் பிறந்தது. இந்த தகவலை விக்னேஷ் சிவன் கூறியதில் இருந்து பல்வேறு விதமான சர்ச்சைகளும், பிரச்சனைகளும் கிளம்பியது.
இதன் காரணமாக நயன் மற்றும் விக்கியின் வாடகைத்தாய் விவகாரம் குறித்து தமிழக அரசு விசாரணை மேற்கொண்டு அறிக்கை சமர்ப்பித்தது. அந்த அறிக்கையில் நயன் மற்றும் விக்கி வாடகைத்தாய் சட்டங்களை மீறவில்லை என்று தெரிய வந்ததால் பிரச்சனை அடங்கியது. இந்நிலையில் நடிகை சமந்தா யசோதா படத்தின் ப்ரோமோஷனுக்காக ஒரு பேட்டி கொடுத்தார்.
அப்போது சமந்தா யசோதா திரைப்படத்தில் வாடகை தாய்முறையில் நடித்திருப்பதால், நயன்தாராவின் வாடகைத்தாய் விவகாரம் குறித்து அவரிடம் கேட்கப்பட்டது. அதற்கு சமந்தா கூறியதாவது, நான் யாரையும் பற்றி பேச மற்றும் கருத்து சொல்ல விரும்பவில்லை. மகிழ்ச்சியாக இருந்தால் சரிதான். மேலும் வாடகை தாய் முறை பற்றி அதிக அளவில் பேசுவது யசோதா திரைப்படத்திற்கு கிடைத்த பிரீ மார்க்கெட்டிங் என்று கூறினார்.