Categories
சினிமா தமிழ் சினிமா

நயன்தாராவை வம்புக்கு இழுத்த நடிகை..!!

இயக்குநர்கள், நடிகர்கள்  என குற்றம்சாட்டி கொண்டிருந்த ஸ்ரீரெட்டி இப்பொழுது நயன்தாராவை வம்புக்கு இழுத்திருக்கிறார்.

அடிக்கடி பல சர்ச்சைகளை சினிமா துறையில் கிளப்பி விடுகிறார் நடிகை ஸ்ரீரெட்டி. இவர் தனக்கு சினிமாவில் வாய்ப்பு தருவதாக கூறி பல சினிமா நட்சத்திரங்கள் சீரழித்து விட்டதாகவும், ஏமாற்றி விட்டதாகவும் பகிரங்கமாக புகார் தெரிவித்தார். இதுமட்டுமல்லாமல் தமிழ் மற்றும் தெலுங்கு என இரண்டு மொழி சினிமா நட்சத்திரங்களில் பலரும் தன்னை படுக்கைக்கு அழைத்ததாக கூச்சம் இல்லாமல் துணிச்சலோடு பெயர்களை வெளிப்படையாக தெரிவித்தார்.

இப்பொழுது சமூக வலைதளத்தில் அவரை பற்றி விமர்சித்து  கருத்து தெரிவிப்பவர்களுக்கு முரட்டு தனமாக பதிலடி கொடுத்து வருகிறார். “இது என் உடல்.. நான் என்ன வேண்டுமானாலும் செய்வேன். ஏன் இங்கு வந்து கமெண்ட் செய்கிறீர்கள்”  என்று ஆக்ரோஷமாக கேட்டிருக்கிறார். “எனக்கு பிடிக்கவில்லை என்றால் நான் பாய்பிரென்ட்டை மாற்றி கொண்டு தான் இருப்பேன்.”
“இதையே பெரிய ஹீரோயின்கள் பற்றி கமெண்ட் செய்வீர்களா.?

நயன்தாரா கூட தான் திருமணம் ஆன ஆண்கள், ஆகாதா ஆண்கள் என பலருடன் காதலில் இருந்துள்ளார். அதற்கெனர் அவரை பற்றி நீங்கள் கமெண்ட் செய்ய உங்களுக்கு தைரியம் இருக்கா?. என்றும் ஒரு ஸ்டார் ஹீரோயினுக்கும், வாய்ப்பு இல்லாமல் போராடும் நடிகைக்கும் இது தான் வித்தியாசம்,” என ஸ்ரீரெட்டி  சாடியுள்ளார். இவர் நயன்தாராவை  வெளிப்படையாக  வம்புக்கு இழுத்திருப்பது அவரது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திருக்கிறது.

Categories

Tech |