வீட்டில் தனியாக இருந்த பெண்ணிடம் மர்ம நபர் 5 பவுன் நகையை கொள்ளையடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மாவட்டத்தில் உள்ள நீர்முள்ளிக்குட்டை கிராமத்தில் விவசாயியான ஆறுமுகம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு நல்லம்மாள் என்ற மனைவியும் உள்ளார். இவர்கள் பூசாரிபட்டி கிராமத்தில் இருக்கும் தோட்டத்தில் பணிபுரிந்து வருகின்றனர். இந்நிலையில் ஆறுமுகம் வீட்டிற்குள் மர்ம நபர் ஒருவர் புகுந்து நல்லம்மாளிடம் தண்ணீர் கேட்பது போல் நடித்துள்ளார். அதன்பின் சற்றும் எதிர்பாராத சற்றும் எதிர்பாராத சமயத்தில் கத்தியை வைத்து தாக்கி நல்லம்மால் அணிந்திருந்த 5 பவுன் தங்க நகையை கொள்ளையடித்து விட்டார். அதன்பிறகு உடனடியாக அந்த மர்ம நபர் நல்லம்மாலை ஒரு அறையில் வைத்து பூட்டிவிட்டு தான் வந்த இருசக்கர வாகனத்தில் தப்பி சென்றுவிட்டார்.
இதனை அடுத்து நல்லம்மாளின் அலறல் சத்தம் கேட்டு அருகில் உள்ளவர்கள் வந்து அறை தால்பாளை திறந்துவிட்டனர். இதனை தொடர்ந்து அருகில் உள்ளவர்கள் அவரை மீட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்துள்ளனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அங்கு பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்துள்ளனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் பெண்ணை தாக்கி நகையை கொள்ளையடித்து சென்ற மர்ம நபரை வலைவீசி தேடி வருகின்றனர்.