தெலுங்கானா மாநிலம் அருகே கடன் பிரச்சினை காரணமாக ஒரு குடும்பம் அணையில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தெலுங்கானா மாநிலம் என்ற காஷினாயனா பகுதிக்கு அருகே உள்ள அணையில் நேற்று சில சடலங்கள் கிடப்பதாக அக்கம்பக்கத்தினர் தகவல் கொடுத்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் மீட்பு பணியாளர்கள் உதவியுடன் இரண்டு குழந்தைகள் மற்றும் இரண்டு பெரியவர்கள் உட்பட நான்கு சடலங்களை மீட்டனர்.
பிறகு விசாரணை செய்ததில் ஸ்ரீராம் நகர் பகுதியை சேர்ந்த ராமகிருஷ்ணா, அவரது மனைவி மற்றும் இரண்டு பிள்ளைகள் என்பது தெரியவந்தது. கடன் பிரச்சினை காரணமாக குடும்பத்துடன் தற்கொலை செய்து கொண்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.