இங்கிலாந்தில் நெடுஞ்சாலையை மறித்தவர்களுக்கு எதிராக தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இங்கிலாந்தில் Insulate Britain என்னும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் பருவநிலை மாற்றத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து M25 நெடுஞ்சாலையை ஒரு வாரத்தில் மட்டும் ஐந்து முறை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மேலும் இவ்வாறு போராட்டத்தில் ஈடுபடுவது ஆபத்தானது மற்றும் எதிரானது. இந்த பருவநிலை மாற்றத்தை அனைவரும் எதிர் கொள்ள வேண்டும். இதுபோன்று போராட்டம் நடத்தினால் மட்டும் அதனை தடுக்க இயலாது. இது ஓட்டுநர்களுக்கு ஆபத்தை விளைவிக்கும்.
அதனால் நெடுஞ்சாலையில் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை அப்புறப்படுத்தும் நடவடிக்கையை போலீசார் மேற்கொள்வார்கள் என்று எதிர்பார்க்கின்றேன் என போக்குவரத்து செயலாளரான கிராண்ட் ஷாப்ஸ் ஏற்கனவே தெரிவித்திருந்தார். ஆனால் இதனை அடுத்தும் Insulate Britain குழுவினர் மீண்டும் நெடுஞ்சாலையை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த போராட்டம் குறித்து கிராண்ட் ஷாப்ஸ் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அதில் ” இது போன்று நெடுஞ்சாலையை மறிப்பது பொறுப்பற்ற செயலாகும்.
இது அனைவரின் உயிருக்கும் ஆபத்தை விளைவிக்கும். நான் போராட்டக்காரர்களுக்கு எதிராக நீதிமன்றத்தில் தடை உத்தரவு கேட்பது குறித்து தேசிய நெடுஞ்சாலைத்துறையை அணுகினேன். இந்த நிலையில் போராட்டக்காரர்களுக்கு எதிராக நீதிபதி தடை உத்தரவு பிறப்பித்துள்ளார். இந்த தடை உத்தரவானது நேற்று பிற்பகல் அமலுக்கு வந்துள்ளது. மேலும் இதனை மீறும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் சிறை தண்டனையையும் நீதிமன்றதை அவமதித்த குற்றத்தையும் ஏற்க வேண்டும்” என்று வெளியிட்டுள்ளார்.