Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

#NEDvPAK : பாகிஸ்தானுக்கு முதல் வெற்றி…. 6 விக்கெட் வித்தியாசத்தில் நெதர்லாந்தை வீழ்த்தியது..!!

சூப்பர் 12 போட்டியில் நெதர்லாந்து அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணி வென்றது. 

டி20 உலக கோப்பை சூப்பர் 12 போட்டியில் இன்று பாகிஸ்தான் மற்றும் நெதர்லாந்து அணிகள் இன்று பெர்த் மைதானத்தில் மோதியது. இதில் டாஸ் வென்ற நெதர்லாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி அந்த அணியின் தொடக்க வீரராக களம் இறங்கிய ஸ்டீபன் மைபர்க் 6, மேக்ஸ் ஓ’டவுட் 0, என அடுத்தடுத்து அவுட் ஆகினர். அதனைத் தொடர்ந்து வந்த பாஸ் டி லீடே 6, டாம் கூப்பர் 0 என அனைத்து வீரர்களும் பாகிஸ்தான் பந்துவீச்சை தாக்கு பிடிக்க முடியாமல் வந்த வேகத்தில் வெளியேறினர்..

யாருமே பெரிய அளவில் ரன்கள் சேர்க்கவில்லை. அதிகபட்சமாக கொலின் அக்கர்மேன் 27 ரன்களும், ஸ்காட் எட்வர்ட்ஸ் 15 ரன்களும் எடுத்து அவுட் ஆகினர். இறுதியில் 20 ஓவர் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 91 ரன்கள் மட்டுமே எடுத்தது நெதர்லாந்து அணி. பாகிஸ்தான் அணியின் தரப்பில் பந்துவீச்சில் அதிகபட்சமாக சதாப் கான் 3 விக்கெட்டுகளும், முகமது வசீம் 2 விக்கெட்டுகளும் எடுத்தனர். மேலும் ஷாஹீன் அப்ரிடி, நசீம் ஷா, ஹரிஸ் ரவூப் ஆகியோர் தலா ஒரு விக்கெட் எடுத்தனர்.

இதையடுத்து பாகிஸ்தான் அணியின் துவக்க வீரர்களாக பாபர் அசாம் மற்றும் முகமது ரிஸ்வான் ஆகியோர் களம் இறங்கினர். இதில் பாபர் அசாம் 4 ரன்களில் அவுட் ஆனார். இதையடுத்து பக்கர் ஜமானுடன், முகமது ரிஸ்வான் ஜோடி சேர்ந்து ஆடினார். அதன்பின் பக்கர் ஜமான் 20 ரன்கள் எடுத்த நிலையில் அவுட் ஆனார். இதையடுத்து ஷான்  மசூத்துடன் முகமது ரிஸ்வான் ஜோடி சேர்ந்து சிறப்பாக ஆடிவந்த நிலையில், அரைசதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட போது 39 பந்துகளில் 49 ரன்கள் எடுத்த நிலையில் அவுட் ஆனார் ரிஸ்வான்..

தொடர்ந்து சான் மசூத் 12 ரன்கள் எடுத்து அவுட் ஆக, அதன்பின் இஸ்திகார் அகமது 6* மற்றும் சதாப்கான் 4* ரன்கள் அடித்து வெற்றி பெற வைத்தனர். பாகிஸ்தான் அணி 13.5 ஓவரில் 4 விக்கெட்டுகளை இழந்து 95 ரன்கள் எடுத்து வென்றது. இதன்மூலம் சூப்பர் 12 சுற்று போட்டியில் முதல் வெற்றியை பதிவு செய்து 2 புள்ளிகளை பெற்று 5 ஆவது இடத்தில் உள்ளது பாகிஸ்தான் அணி. நெதர்லாந்து தொடர்ந்து 3 தோல்விகளை பெற்று கடைசி 6ஆவது இடத்தில் உள்ளது.

Categories

Tech |