Categories
சினிமா தமிழ் சினிமா

‘நீ நெனச்சது எல்லாம் ஒவ்வொண்ணா ஏன் நடக்குது’… அஜித்துக்கு கவிதை எழுதிய பிரபல பாடலாசிரியர்…!!!

பிரபல பாடலாசிரியர் ஒருவர் நடிகர் அஜித்திற்கு கவிதை எழுதியுள்ளார்.

தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் அஜித் நடிப்பில் தற்போது வலிமை திரைப்படம் தயாராகி வருகிறது . இந்த படத்தில் நடித்து வந்தது  மட்டுமல்லாமல் மற்றொருபுறம் நடிகர் அஜித் துப்பாக்கி சுடும் போட்டியில் கலந்து கொண்டிருந்தார். நடிகர் அஜித் தமிழக அளவில் நடந்த 46வது துப்பாக்கி சுடும் போட்டியில் தங்கப்பதக்கம் வென்றார். மேலும் தேசிய அளவிலான துப்பாக்கி சுடும் போட்டிக்கும் அவர் தேர்வு பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியானது.

கடந்த இரண்டு நாட்களாக நடிகர் அஜித்திற்கு தங்க மெடல் கொடுக்கப்பட்ட புகைப்படங்கள் வெளியாகி இணையத்தை கலக்கி வருகிறது. இதையடுத்து அவருக்கு பிரபலங்களும் ரசிகர்களும்,  வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் நடிகர் அஜித்திற்கு வாழ்த்து கூறிய  கவிதை ஒன்றை பிரபல பாடலாசிரியர் விவேகா டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். இந்த அழகிய கவிதை தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Categories

Tech |