Categories
உலக செய்திகள்

“நீச்சல் குளத்தை விட்டு வர மாட்டேன்”… விலங்குகள் மீட்பு குழுவினரை திணற வைக்கும் முதலை…. வைரலாகும் வீடியோ…!!

தென்னாப்பிரிக்காவில் நீச்சல் குளத்திலிருந்த ராட்சத முதலையை விலங்குகள் மீட்பு குழுவினர் மிகவும் சிரமப்பட்டு வெளியேற்றியுள்ளனர். 

தென்னாப்பிரிக்காவில் வசிக்கும் Jacob Breytenbach மற்றும் அவரது மனைவி Angel ஆகிய இருவரும் நீச்சல் குளத்திற்கு குளிக்க சென்றுள்ளனர். அப்போது அவர்கள் நீச்சல்குளத்தில் இராட்சத முதலை ஒன்று நீந்தி கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர். பின்னர் உடனடியாக  விலங்குகள் மீட்பு குழுவினருக்கு தம்பதியினர் தகவல் அளித்துள்ளனர் . மீட்பு குழுவினர் அந்த முதலையை நீச்சல் குளத்தில் இருந்து வெளியேற்றிய காட்சி தற்போது வெளியாகியுள்ளது.

அந்த வீடியோவில் விலங்குகள் மீட்பு குழுவை  சேர்ந்த ஒருவர், முதலையின் வாயை கயிறால் கட்டி தண்ணீரிலிருந்து வெளியேற்றியுள்ளார்.  நீச்சல்குளத்திலிருந்து வெளியேற்றப்பட்ட அந்த  முதலை தற்போது  பாதுகாப்பான இடத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. Jacob Breytenbach- Angel தம்பதியினர் தற்போது வீட்டை விட்டு வெளியே வரும்போது தங்கள் கண்காணிப்பு கேமராவில் முதலை ஏதாவது அந்த இடத்தில் இருக்கிறதா? என்று சோதித்து விட்டுத்தான் வருகிறார்களாம்.

Categories

Tech |