Categories
தேனி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

நீட் ஆள் மாறாட்டம் : 2 பேர் மீது வழக்கு பதிவு,கைது நடவடிக்கை… தேனி SP தகவல்

நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் புகாரில் இருவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்படுமென்று தேனி மாவட்ட SP தெரிவித்துள்ளார்.

கடந்த 13_ஆம் தேதி அசோக் என்பவர் தேனி மருத்துவ கல்லூரி டீனுக்கு மின்னஞ்சலில் புகார் அளித்தன் அடிப்படையில் நடைபெற்ற விசாரணையில் சென்னையை சேர்ந்த மருத்துவரின் மகன் மஹாராஷ்டிராவில் நீட் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்று , தேனி மருத்துவ கல்லூரியில் படித்த உதய் சூர்யா_வில் புகைப்படம் சர்சைக்குள்ளாக்கியது. மேலும் இது தொடர்பாக நடைபெற்ற விசாரணையில் தேர்வு எழுதியவர் புகைப்படம் ஒன்றாகவும் , கல்லூரியில் படிக்கும் உதய் சூர்யாவின் புகைப்படமும் மாறுபட்டு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து தேனி மருத்துவ கல்லூரி விசாரணைக்குழு நடத்திய விசாரணையில் உதய் சங்கர் மேலும் படிக்க விரும்பவில்லை என்று எழுதி கொடுத்து விட்டு சென்றதாக தெரிகின்றது. இதையடுத்து இது தொடர்பான அறிக்கையை மாநில சுகாதாரத்துறை இயக்குநருக்கு தேனி மருத்துவக் கல்லுரி டீன் அனுப்பி இருந்தார். இந்நிலையில் ஆள்மாறாட்டம் செய்து தேனி மருத்துவக் கல்லூரியில் மாணவர் சேர்ந்த விவகாரத்தில் 3 பிரிவுகளின் கீழ் 2 பேர் மீது வழக்குப்பதிவு செய்து ,  2 பேரையும் கைது செய்ய  நடவடிக்கை எடுக்கப்படும் என்று தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாஸ்கரன் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |