அமேசான் நிறுவனம் கூடுதலாக 75,000 ஊழியர்களை பணியில் அமர்த்த உள்ளதாக தெரிவித்துள்ளது.
தற்போது கொரோனா பாதிப்பை தடுப்பதற்காக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த சமயங்களில் பொதுமக்கள் தங்களது வீட்டிற்கு தேவையான அத்தியாவசியப் பொருட்களை வாங்குவதற்காக மட்டுமே வெளியே வருகின்றனர். அப்படியும் ஒரு சிலர் வெளியில் வர பயந்து கொண்டு வீட்டில் இருந்தபடியே பொருட்களை ஆர்டர் செய்து விடுகின்றனர்.
அந்த வகையில் தற்போது அதிகப்படியான ஆர்டர்கள் வந்து குவிவதால் பொருட்களை கொண்டு சேர்ப்பதற்கான ஊழியர்கள் அமேசான் போன்ற பெரிய நிறுவனங்களிடம் இல்லை. ஆகவே அமேசான் தற்போது மேலும் 75 ஆயிரம் ஊழியர்களை பணியில் சேர்க்க உள்ளதாக தெரிவித்துள்ளது. ஏற்கனவே அமேசானில் ஒரு லட்சம் ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.