நீட் விலக்கு மசோதாக்களை மீண்டும் நிறைவேற்ற சிறப்பு சட்டமன்ற கூட்டத்தை கூட்ட வேண்டுமென்று திமுக தலைவர் ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்து திமுக தலைவர் முக.ஸ்டாலின் தமிழக தமிழக அரசை வலியுறுத்தி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் நீட் விளக்கு மசோதாவை மீண்டும் நிறைவேற்ற சிறப்பு சட்டமன்றக் கூட்டத் தொடரை கூட்ட வேண்டும். விளக்கம் கேட்கிறோம் என்ற போர்வையில் கடிதம் எழுதி அதிமுக அரசு திட்டமிட்டு தாமதம் செய்கிறது என்று தெரிவித்துள்ளார்.
மேலும் , நீட் விவகாரத்தில் மத்திய மாநில அரசுகளின் துரோகத்தை தமிழகம் ஒருபோதும் மன்னிக்காது. மசோதாவை மீண்டும் நிறைவேற்றுவோம் என்ற முதல்வர் உறுதி மொழியை நீதிமன்றத்தில் தெரிவிக்காதது ஏன்..? மசோதாக்களை மீண்டும் அவை நிறைவேற்றும் மனநிலையில் அதிமுக அரசு இல்லை.நீட் தேர்வில் இருந்து விலக்கு வழங்க எதிர்க்கட்சித் தலைவர்களை அழைத்து சென்று பிரதமரிடம் வலியுறுத்த வேண்டும் என்றும் ஸ்டாலின் வலியுறுத்தியிருக்கிறார்.