மஹாராஷ்டிராவில் நீட் தேர்வு எழுதிய மாணவனின் ஹால் டிக்கெட் புகைப்படமும் , கல்லூரியில் சேர்க்கும் போது கொடுத்த புகைப்படமும் வெவ்வேறாக உள்ளதாக என்ற புகார் எழுந்தது சர்சையை ஏற்படுத்தியது. இதையடுத்து ஆள் மன்றாட்டமாக இருக்குமா என்ற சந்தேகம் எழுந்த நிலையில் கல்லூரி முதல்வர் ராஜேந்திரன் இது தொடர்பான அறிக்கையை மாநில சுகாதாரத்துறை இயக்குநருக்கு அனுப்பி வைத்துள்ளார்.
இது குறித்து மாணவனின் தாயாரிடம் கேட்டபோது அவர் முரண்பட்டு பேசுவதாகவும் ,புகாருக்கு உள்ளான மாணவர் சென்னையை சேர்ந்த மருத்துவரின் மகன் என்றும் தெரியவந்தது. மேலும் இந்த மாணவன் இரண்டு முறை சென்னையில் தேர்வெழுதி அதில் தோல்வி அடைந்ததால் மஹாராஷ்டியில் எழுதி உள்ளதாகவும் தெரிய வந்தது. மேலும் ஆள் மாறாட்டம் என்ற சந்தேகம் வந்தது முதல் சம்மந்தப்பட்ட மாணவன் கல்லூரிக்கு வரவில்லை
இந்நிலையில் கல்லூரியின் டீன் கூறுகையில் இமெயில் மூலம் வந்த புகாரின் அடிப்படையில் விசாரணை நடைபெற்றது என்றும் இதன் விசாரணையை மேற்கொள்ள காவல்துறையிடம் புகார் அளித்துள்ளோம் என்று டீன் டி ராஜேந்திரன் தெரிவித்துள்ளார். சம்மந்தப்பட்ட மாணவன் சென்னை மருத்துவரின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது.