நீட் தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்ட மாணவன் உதித் சூர்யா நேற்று குடும்பத்துடன் தனிப்படை போலீசாரால் கைது செய்யப்பட்டார். இதை தொடர்ந்து சென்னை எழும்பூரில் உள்ள CBCID போலீஸ் தலைமையகத்தில் வைத்து விசாரணை மேற்கொண்ட பின் நேற்று இரவு மாணவன் உதித் சூர்யா , அவரின் தந்தை , தாய் ஆகியோரை தனி படை போலீஸ் மற்றும் CBCID போலீசார் தேனி அழைத்து வந்தனர்.
அதைத்தொடர்ந்து இன்று காலை தேனி மருத்துவ கல்லுரி முதல்வர் மற்றும் துணை முதல்வரிடம் CBCID போலீசார் விசாரணை நடத்தினர்.பின்னர் மாணவனின் தந்தை மற்றும் தாய்யிடம் தனித்தனியாக விசாரணை நடத்திய CBCID போலீசார் மாணவன் உதித் சூர்யாவிடமும் விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில் நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்ததை உதித் சூர்யாவின் தந்தை ஒப்புக்கொண்டார்.
இதையடுத்து மாணவன் உதித் சூர்யா , மற்றும் அவரது தந்தை வெங்கடேசன் ஆகியோர் மீது ஆள்மாறாட்டம் , கூட்டுசதி , தவறான ஆவணங்களை தயார் செய்தல் என மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தது. CBCID போலீசார் விசாரணையில் பெறப்பட்ட ஒப்புதல் வாக்குமூலங்கள் மற்றும் ஆவணங்களை ஒருங்கிணைத்து கைதான உதித் சூர்யா, மற்றும் அவரது தந்தை வெங்கடேசன் ஆகியோரை தேனி மாவட்ட நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியது சிபிசிஐடி ஆஜர்படுத்தியது.