Categories
மாநில செய்திகள்

நீட் ஆள்மாறாட்டம் : ”ரூ 20,00,000 கைமாறியது”அம்பலம்…. மும்பை செல்லும் CBCID ….!!

நீட் தேர்வு ஆள்மாறாட்டத்திற்கு உதித் சூர்யாவிற்கு உதவிய பயிற்சி மையத்துக்கு 20 லட்சம் ரூபாய் தரப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

நீட் ஆள்மாறாட்டம் தொடர்பாக கைது செய்யப்பட்ட மாணவன் உதித் சூர்யா மற்றும் அவரது தந்தையிடம் சிபிசிஐடி அதிகாரிகள் நடத்திய விசாரணையில் இதற்கான இடைத்தரகர்கள் விவரத்தை பெற்று இருப்பதாக தகவல் வெளியாகியது. மேலும் ஆள்மாறாட்டம் செய்து தேர்வு எழுத உதவிய பயிற்சி மையத்திற்கு 20 லட்சம் ரூபாய் தரப்பட்டதாக தகவல் கைது செய்யப்பட்ட மாணவன் உதித் சூர்யா_வின் தந்தை தெரிவித்ததாக அதிர்ச்சி தகவல் கிடைத்துள்ளது.

இன்று காலை முதல் தேனியில் வைத்து சிபிசிஐடி எஸ்பி விஜயகுமார் தலைமையில் நடந்த விசாரணையில் உதித் சூர்யா_வின் தனது உதித் சூர்யா_வை மருத்துவர் ஆக்குவதற்காக 20 லட்ச ரூபாய் ரொக்கம் இடைத்தரகர் மூலமாக மும்பை பயிற்சி மையத்திற்கு கொடுத்ததாகவும்,ல் அதனுடன் உதித் சூர்யா புகைப்படமும் கொடுத்ததாக தெரிவித்துள்ளார். மேலும் அங்குள்ள பயிற்சி மையம் ஒரு இளைஞரை ஆள்மாறாட்டம் செய்து நீட் தேர்வு எழுத வைத்திருக்கிறார்கள்  என்று விசாரணையில் தெரியவந்துள்ளது.

ஆள் மாறாட்டம் செய்தது தொடர்பாக சிபிசிஐடி காவல் துறை நடத்திய விசாரணையில் கிடைத்த தகவலின் படி சிபிசிஐடி தனிப்படை காவல்துறையினர் மும்பைக்குச் சென்று நீட் பயிற்சி மையம் மற்றும் ஆள்மாறாட்டம் செய்து தேர்வு எழுதிய மாணவன் குறித்தும் விசாரணை மேற்கொள்ள இருக்கிறார்கள். தற்போது உதித் சூர்யா மற்றும் அவரது தந்தையை தேனியில் உள்ள குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி நீதிமன்ற காவலில் வைப்பதற்கும் சிபிசிஐடி காவல்துறையினர் முனைப்பு காட்டி வருகிறார்கள்.

Categories

Tech |