Categories
மாநில செய்திகள்

நீட் ஆள்மாறாட்டம் : சிக்குவாரா உதித் ? தனிப்படை தேடுதல் வேட்டை….!!

நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்தது தொடர்பாக தனிப்படை போலீஸார் மாணவன்   உதித்சூர்யா தேடி வருகின்றனர்.

சென்னையை சேர்ந்த மருத்துவரின் மகன் உதித்சூர்யா மஹாராஷ்டிராவில் ஆள்மாறாட்டம் செய்து நீட் தேர்வில் தேர்ச்சி பெற்று தேனி அரசு மருத்துவ கல்லூரியில் சேர்ந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது குறித்து தேனி பல்கலைக்கழக டீனுக்கு வந்த EMAIL மூலமாக இந்த விவகாரம் வெளிச்சத்துக்கு வந்தது.இது குறித்த விசாரணை நடக்கும் போதே மாணவன் உதித்சூர்யா கல்லூரியை விட்டு நிற்பதாக எழுதி கொடுத்ததாக தெரிகின்றது.

மேலும் தேனி மருத்துவக் கல்லுரி டீனும் இது குறித்து அறிக்கை , விசாரணை உட்பட அவங்களை வைத்து போலீஸ் புகார் செய்தார். இதையடுத்து ஆள்மாறாட்டம் தொடர்பாக 2 பேர் மீது வழக்கு பதிவு செய்த காவல்துறை உதித்சூர்யா_வை கைது செய்ய தனிப்படை அமைத்தது. இந்நிலையில்

இந்நிலையில் உதித்தசூர்யா_வை தேடி சென்னை தண்டையார்பேட்டையில் உள்ள மாணவர் உதித் சூர்யா வீட்டிற்கு தனிப்படை போலீசார் சென்றனர். உதித் சூர்யா வீட்டில் யாரும் இல்லாததால் அருகிலுள்ள குடியிருப்பு வாசிகளிடம் தனிப்படை போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |