வீட்டிலிருந்தே பாஸ்போர்ட் ஆன்லைனில் விண்ணப்பிப்பது எப்படி என்பதை இப்போது பார்க்கலாம்.
இந்தியாவில் இருந்து வேறு எந்த நாட்டுக்கும் செல்வதற்கு பாஸ்போர்ட் கட்டாயம் தேவை முன்பெல்லாம் பாஸ்போர்ட் வாங்குவதற்காக இடைத்தரகர்களை நாடி செல்ல வேண்டியது இருக்கும். ஆனால் இப்போது ஆன்லைனிலேயே எளிதாக பாஸ்போர்ட்க்கு விண்ணப்பிக்க முடியும். இதன் மூலம் மிக விரைவாக பாஸ்போர்ட் கிடைக்கும். மேலும் இடைத்தரகர்களின் சுரண்டல் தடுக்கப்படுகிறது. பாஸ்போர்ட் சேவா கேந்திரா மூலம் எப்படி விண்ணப்பிக்கலாம் என்பதை இப்போது பார்க்கலாம்.
விண்ணப்பிக்கும் முறை:
passportindia.gov.in/AppOnlineProject என்ற இணையதளத்தில் சென்று REGISTER NOW என்ற ஆப்ஷனை கிளிக் செய்யவும்.
இதையடுத்து PASSPORT OFFICE என்பதை தேர்வுசெய்து REGISTER TO APPLY AT என்ற ஆப்ஷனை கிளிக் செய்யவும்.
அதன் பின்னர் உங்கல் பக்கத்திலுள்ள பாஸ்போர்ட் அலுவலகத்தை PASSPORT OFFICE என்பதைக் கிளிக் செய்து தேர்ந்தெடுக்கவும்.
தில் GIVEN NAME என்பதில் உங்களின் பெயரைப் பதிவு செய்து, SURNAME என்பதில் உப பெயரைப் பதிவிட வேண்டும்.
இதையடுத்து DATE OF BIRTH என்பதில் உங்களின் பிறந்த தேதியைப் பதிவிட வேண்டும்.
பின்னர் உங்களது மின்னஞ்சல் முகவரியை பதிவிட்டு இதே மின்னஞ்சல் முகவரியை உங்களது லாகின் ஐடியாக வைத்துக்கொள்ள விரும்பினால் இதையே தேர்ந்தெடுத்து கொள்ளலாம். அதற்கு DO YOU WANT YOUR LOGIN ID TO BE SAME AS EMAIL ID என்பதில் Yes / No கொடுக்கவும்.
தன பின்னர் விண்ணப்பத்தின் வகையைத் தேர்ந்தெடுக்கவும். அதாவது SELECT APPLICATION TYPE என்பதில் PASSPORT என்பதைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.
அதில் TYPE OF SERVICE என்பதில் FRESH என்ற ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும்.
APPLICANT AGE என்ற ஆப்ஷனில் உங்களின் வயது மற்றும் REQUIRED SCHEME என்பதில் NORMAL, TATKAAL ஆகிய ஆப்ஷனை தேர்ந்தெடுக்கவும்.
இதையடுத்து எத்தனை PAGES என்பதைத் தேர்ந்தெடுக்க வேண்டும். எடுத்துக்காட்டு: 36 PAGES, 60 PAGES.
கடைசியில் விண்ணப்ப கட்டணத்தைச் செலுத்திவிட்டு, APPONTMENT AVAILIBILITY என்ற ஆப்ஷனை கிளிக் செய்யவும். உங்களுக்கு பக்கத்திலுள்ள பாஸ்போர்ட் அலுவலகத்தையும், தேதியையும் தேர்ந்தெடுத்து Submit என்ற ஆப்ஷனை கொடுக்கவும்.
இந்த விண்ணப்ப நிரப்பி முறை முடிந்த பின்னர் காவல்துறை அலுவலர் சரிபார்ப்புக்கு பின்னர் , பாஸ்போர்ட்டுக்கு ஒப்புதல் கிடைத்து உங்கள் வீட்டு முகவரிக்கு அனுப்பப்படும்.