Categories
மாநில செய்திகள்

நீட் தேர்வை ஒழிப்பதற்கான நேரம் வந்துவிட்டது… உதயநிதி ட்விட்…!!

தமிழகத்தில் நீட் தேர்வை ஒழிப்பதற்கான நேரம் வந்துவிட்டது என்று உதயநிதி ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் பிளஸ் டூ பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டதாக முதல்வர் முக ஸ்டாலின் அதிகாரபூர்வமாக தெரிவித்தார். இதைத்தொடர்ந்து நீட்  நுழைவு தேர்வு தொடர்பாக பிரதமர் மோடிக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில் தமிழகத்தில் நீட் உள்ளிட்ட பல்வேறு நுழைவு தேர்வுகளை ரத்து செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார். தமிழகத்தில் நீட் தேர்வு என்பது இப்போதைய சூழ்நிலையில் உகந்ததாக இருக்காது. எம்பிபிஎஸ் உள்ளிட்ட படிப்புகளுக்கான சேர்க்கை பிளஸ் டூ மதிப்பெண் அடிப்படையில் நடத்த வேண்டும் என்று அந்த கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார்.

இதைத்தொடர்ந்து உதயநிதி ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு கருத்தை பதிவிட்டுள்ளார். அதில் நம் வீட்டுப் பிள்ளைகளின் மருத்துவராகும் கனவை நசுக்கி, 13 மாணவச் செல்வங்களை கொலைசெய்த நீட்டை ஒழிப்பதற்கான நேரம் வந்துவிட்டது. நீட் தேர்வின் பாதகங்களை கண்டறிய ஓய்வுபெற்ற நீதியரசர் ஏ கே ராஜன் அவர்கள் தலைமையில் உயர்நிலை குழு அமைத்த மாண்புமிகு முதல்வர் முக ஸ்டாலினுக்கு என் மனமார்ந்த நன்றி என்று பதிவிட்டுள்ளார்.

Categories

Tech |