தமிழகத்தில் நீட் தேர்வு காரணமாக பாதிப்பு உள்ளதாக ஓய்வுபெற்ற நீதிபதி ஏ கே ராஜன் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் மருத்துவ மாணவர்கள் சேர்க்கையில் நீட் தேர்வால் ஏற்பட்ட பாதிப்புகளை ஆய்வு செய்ய முதல்வர் மு க ஸ்டாலின் ஓய்வு பெற்ற நீதிபதி ஏ கே ராஜன் தலைமையில் உயர் குழு ஒன்றை அமைத்திருந்தார். நீட் தேர்வு முறையால் நமது மாநிலத்தில் உள்ள கிராம மற்றும் நகர்ப்புற மாணவர்கள், அரசுப் பள்ளியில் பயிலும் மாணவர்கள், தமிழ் வழியில் பயின்ற மாணவர் , பின்தங்கிய நிலையில் உள்ள மாணவர்கள் போன்றவர்களுக்கு கடந்த சில ஆண்டுகளாக மருத்துவ கல்லூரியில் படிக்கும் வாய்ப்பு மறுக்கப்பட்டு வருகின்றது.
இதுபற்றி ஆய்வு செய்வதற்காக நீதிபதி ஏ கே ராஜன் தலைமையில் எட்டு பேர் கொண்ட குழு உருவாக்கப்பட்டு விவரங்கள் சேகரிக்கப்பட்டது. அதில் தமிழகத்தில் நீட் தேர்வின் காரணமாக பாதிப்பு உள்ளதாக குழுவிலுள்ள 8 பேரும் கருத்து தெரிவித்துள்ளனர். அதன்படி வரும் 21ஆம் தேதி நடைபெறும் இரண்டாவது கூட்டத்தில் நீட் தேர்வு குறித்த அடுத்த கட்ட நடவடிக்கை சம்பந்தமாக ஆலோசனை நடத்தப்படும் என ஓய்வு பெற்ற நீதிபதி ஏ கே ராஜன் தெரிவித்துள்ளார்.