தமிழ்நாட்டில் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு ஓ. பன்னீர்செல்வம் கடிதம் எழுதியுள்ளார்.
தமிழ்நாட்டின் ஏழை, எளிய மற்றும் கிராமப்புற மாணவர்களை பாதிக்கும் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என பிரதமர் மோடிக்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது: “மருத்துவ படிப்பிற்கான நீட் தேர்வினை ஆரம்பம் முதலே எதிர்த்து வந்தவர் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா. 2011 ஆம் ஆண்டு இளநிலை மற்றும் முதுநிலை மருத்துவ படிப்புகளுக்கு நீட் தேர்வினை அறிமுகம் செய்தபோது மத்திய அரசு எடுத்த முடிவை தமிழக முதல்வர் ஜெயலலிதா கடுமையான ஆட்சேபனை செய்து கடிதம் வாயிலாக பிரதமருக்கு தெரிவித்தார்.
நீட் தேர்வை தடை செய்ய வேண்டுமென தனது இறுதி மூச்சு வரை போராடியவர் மறைந்த முதல்வர் ஜெயலலிதா. என்னவே தமிழக மக்களின் நலனுக்காக, மாணவர்களின் நலனுக்காக மத்திய அரசால் தமிழ்நாட்டில் நடத்தக்கூடிய அனைத்து நுழைவுத் தேர்வுகளையும் ரத்து செய்ய வேண்டும்” என்று அவர் தனது கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார்.