Categories
ஈரோடு மாநில செய்திகள்

நீட் பயிற்சி….. அமெரிக்காவுல இருந்து ஆள் இறக்குவோம்….. அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி….!!

தமிழக மாணவர்களுக்கு நீட்  பயிற்சி அளிக்க அமெரிக்காவிலிருந்து சிறப்பு நிபுணர்கள்  வரவழைக்க பட உள்ளதாக அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே சிறுவல்லூர் கொங்கம்பாளையம் பாலையூர் வெள்ளாளபாளையம் உள்ளிட்ட இடங்களில் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு வழங்கும் நிகழ்ச்சியில் அமைச்சர் செங்கோட்டையன், கே.சி.கருப்பண்ணன்  ஆகியோர் கலந்து கொண்டனர்.

பின் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன் அனைத்து துறைகளிலும் தமிழகம் முன்னோடி மாநிலமாக திகழ்வதாக கூறினார். தொடர்ந்து பேசிய அவர், தமிழக மாணவர்கள் நீட் தேர்வில் தோல்வியை சந்திக்காமல் இருக்க அவர்களுக்கு அமெரிக்காவிலிருந்து சிறப்பு வல்லுனர்கள் வரவழைக்கப்பட்டு பயிற்சி அளிக்கப்பட உள்ளதாகவும் அவர்  தெரிவித்தார்.

Categories

Tech |