மலைவாழ் மக்களுக்கு காவல்துறையினரின் சார்பில் நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டுள்ளது.
கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள பொள்ளாச்சி அருகில் இருக்கும் ஆழியாறு, சின்னாறு பகுதியில் கடந்த 15ஆம் தேதி கனமழை பெய்துள்ளது. இதனால் அங்குள்ள மரங்கள் சாய்ந்து விழுந்ததில் மலைவாழ் மக்களின் வீடுகள் சேதம் அடைந்துவிட்டது. அதன் பின் அதிகாரிகள் மலைவாழ் மக்களை ஆழியாரில் இருக்கும் ஒரு மண்டபத்தில் தங்க வைத்துள்ளனர்.
இந்நிலையில் மலைவாழ் மக்களுக்கு ஆழியாறு காவல்துறையினர் சார்பில் நிவாரண பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சியானது நடைபெற்றுள்ளது. இந்த நிகழ்ச்சிக்கு வால்பாறை போலீஸ் துணை சூப்பிரண்டு விவேகானந்தன் தலைமை தாங்கியுள்ளார். அப்போது 35 குடும்பங்களுக்கு 10 நாட்களுக்கு தேவையான மளிகை பொருட்கள், சேலை, சட்டை, அரிசி, பருப்பு, பெட்சீட் போன்றவை வழங்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியில் காவல்துறையினர் மற்றும் வனத்துறையினர் கலந்து கொண்டனர்.