Categories
சினிமா தமிழ் சினிமா

நீளமான தலைமுடியுடன் பிக்பாஸ் ஆரி… ‘பகவான்’ படப்பிடிப்பில்… ரசிகர்களுடன் செல்பி…!!!

‘பகவான்’ படப்பிடிப்பில் நடிகர் ஆரி தனது ரசிகர்களுடன் இணைந்து செல்பி புகைப்படங்கள் எடுத்துக் கொண்டுள்ளார்.

தமிழ் திரையுலகில் நடிகர் ஆரி அர்ஜுனன் ரெட்டைசுழி ,மாயா, மாலை பொழுதின் மயக்கத்திலே, நெடுஞ்சாலை உள்ளிட்ட பல படங்களில் நடித்திருந்தார். இதையடுத்து பிக் பாஸ் நிகழ்ச்சியின்  நான்காவது சீசனில் கலந்துகொண்டு ரசிகர்களின் பேராதரவுடன் டைட்டிலை வென்றார் . தற்போது ஆரி நடிப்பில் அலேகா, எல்லாம் மேல இருக்குறவன் பார்த்துப்பான், பகவான் உள்ளிட்ட சில படங்கள் தயாராகி வருகிறது .

 

சமீபத்தில் வெளியான பகவான் படத்தின் மோஷன் போஸ்டர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது. தற்போது இந்த படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு திருவண்ணாமலை செஞ்சி கோட்டைக்கு அருகில் மிக விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நீளமான முடியுடன் பகவான் பட கெட்டப்பில் இருக்கும் ஆரி தனது ரசிகர்களுடன் இணைந்து செல்பி புகைப்படம் எடுத்துக் கொண்டுள்ளார் .

Categories

Tech |