டெல்லி உள்பட பல்வேறு மாநிலங்களையும் கொரோனா வைரஸ் காய்ச்சல் ஆட்டிப்படைத்துக்கொண்டு இருக்கிறது. மற்ற காய்ச்சல்களைப்போல ஒரு ஊசி போட்டுக்கொள்வதாலோ, சில மாத்திரைகளை விழுங்குவதாலோ குணப்படுத்திவிட முடியாது. இந்தநிலையில் தான் ஏற்கனவே மற்ற காய்ச்சல்களுக்கும், சளி போன்ற நோய்களுக்கும் சித்த மருத்துவர்கள் பரிந்துரைத்த நிலவேம்பு கசாயம் உதவும் என கூறப்படுகிறது. எனவே நிலவேம்பு கஷாயத்தை வீட்டிலேயே எளிமையாக செய்வது குறித்து இங்கு காண்போம்.
நிலவேம்புப் பொடியை கசாயமாகக் காய்ச்சி பயன்படுத்த வேண்டும். நிலவேம்புப் பொடியில் நில்வேம்பு, சுக்கு, பட்படாகம், வெட்டிவேர், விளாமிட்சை வேர், மிளகு, சந்தனம் போன்ற ஒன்பது விதமான மூலிகைகள் உள்ளன. இவை அனைத்தும் திப்பியாக அரைக்கப்பட்டு ‘நிலவேம்புப் பொடி’யாகக் கிடைக்கிறது.
தேவையான பொருட்கள் :
நிலவேம்பு – 10 கிராம்,
சுக்கு – 10 கிராம்,
மிளகு – 10 கிராம்,
சந்தனத்தூள் – 10 கிராம்,
கோரைக்கிழங்கு – 10 கிராம்,
வெட்டிவேர் – 10 கிராம்,
பேய்புடல் – 10 கிராம்,
பற்பாடகம் – 10 கிராம்,
விலாமிச்சம் வேர் – 10 கிராம்.
செய்முறை :
மேலே குறிப்பிட்டுள்ள பொருட்களை எடுத்து சுத்தம் செய்துகொண்டு அவற்றை நன்கு இடித்து பொடி செய்துகொள்ள வேண்டும். அந்த பொடியை 800 மில்லி லிட்டர் நீரில் 25 கிராம் பொடியை கலந்து நீரை நான்கு கொதிக்க விட வேண்டும். நீரானது 800 மி.லி. இருந்து 150 மி.லி ஆகும் வரை நன்கு கொதிக்க வேண்டும். அதன் பிறகு ஆறவைத்து சுத்தமாக வடிகட்டி வைத்துக்கொள்ள வேண்டும். நிலவேம்பு கஷாயம் ரெடி!
நிலமேம்புப் பொடி நாட்டு மருந்து கடைகளிலும் கிடைக்கிறது. அதனை வாங்கி 10 கிராம் எடுத்துக்கொண்டு 400 மி.லி. தண்ணீரில் கலந்து நன்றாக கொதிக்க வைக்க வேண்டும். இந்த நீர் 50மி.லி.யாக, அதாவது எட்டில் ஒரு பாகமாக ஆகும்போது அதை எடுத்து வடிகட்டி குடிக்கலாம்.