Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

“நீண்ட காலம் வாழ வேண்டும் என்று விரும்பினேன்”… இப்படி ஆகிவிட்டதே – கமல் இரங்கல்…!!

நடிகர் இர்பான்கான் மறைவிற்கு, நடிகர் கமல்ஹாசன் ‘நீங்கள் நீண்ட காலம் வாழ வேண்டும் என விரும்பினேன்’ என்று கூறி இரங்கல்  தெரிவித்துள்ளார்.

ஹாலிவுட், பாலிவுட் என கலக்கி கொண்டிருந்தவர் பிரபலமான நடிகர் தான் இர்பான் கான். இவர் நேற்று உடல் நலம் சரியில்லாத காரணத்தால் மும்பையில் இருக்கும் கோகிலா பென் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவருக்கு இருந்த பெருங்குடல் தொற்று பிரச்சனையால் ஐசியுவில் அனுமதிக்கப்பட்டு, தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனாலும் அந்த சிகிச்சை அவருக்கு பலனளிக்கவில்லை, இதனால் இன்று அவரின் உயிர் பிரிந்தது.

அவருடைய திடீர் மறைவுக்கு, திரைபிரபலங்கள் மற்றும் அரசியல் கட்சி தலைவர்களும் இரங்கல் தெரிவித்து கொண்டிருக்கின்றனர். அது மட்டுமின்றி அவரது ரசிகர்கள் பலரும் சமூக வலைத்தளத்தில் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் இவரின் மறைவுக்கு நடிகரும், மக்கள் நீதி மையம் கட்சி தலைவருமான கமல்ஹாசன் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்தார்.

இதுபற்றி அவர் டுவிட்டர் பதிவில் கூறியது; 

இர்பான் ஜி இவ்வளவு சீக்கிரம் போகவேண்டுமா. உங்களுடைய நடிப்பு எப்பொழுதும் என்னை பிரமிப்பில் ஆழ்த்தியிருக்கிறது. எனக்கு தெரிந்த சிறந்த நடிகர்களில் நீங்களும் ஒருவர். நீங்கள் நீண்ட காலம் வாழ வேண்டும் என விரும்பினேன். நீங்கள் நீண்ட காலம் வாழ தகுதியுடையவர். உங்கள் குடும்பத்தினர் தைரியமாக இருக்க வேண்டும், என்று கூறியிருந்தார்.

Categories

Tech |