Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

நீண்ட நாட்கள் கழித்து திறக்கப்பட்டதால்…. அமோகமாக நடைபெற்ற விற்பனை…. மகிழ்ச்சியடைந்த விற்பனையாளர்கள்….!!

இரண்டு மாதங்களுக்கு பிறகு மாட்டுச்சந்தை திறக்கப்பட்டதால் விற்பனையாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

ஈரோடு மாவட்டத்திலுள்ள அந்தியூரில் கொரோனா ஊரடங்கு காரணமாக மூடப்பட்டிருந்த மாட்டு சந்தை மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பர்கூர், மேட்டூர், மேச்சேரி, தர்மபுரி, ஈரோடு மற்றும் அந்தியூர் போன்ற பகுதிகளிலிருந்து மாடுகள் விற்பனைக்காக கொண்டுவரப்பட்டன. இதனால் அந்தியூர் மாட்டுச்சந்தையில் ஏராளமான பொதுமக்கள் கூட்டம் காணப்பட்டது.

இதனையடுத்து நாட்டு பசுமாடு 20,000 முதல் 50,000 வரையிலும், காங்கேயம் காளை மாடுகள் ஒரு ஜோடி  70,000 ஆயிரம் முதல் 1 லட்சம் வரையிலும், பர்கூர் காளை 30,000 முதல் 50,000 வரையிலும், ஜெர்சி இன பசுமாடு  15,000 முதல் 35,000 வரையிலும் விலைபோனது. மேலும்  எருமை மாடு 50,000 முதல் 60,000 வரையிலும் கன்று குட்டி 5,000 முதல் 15,000 வரையிலும் விலை போனது. இதனையடுத்து நீண்ட நாட்கள் கழித்து சந்தைகள் திறக்கப்பட்டதால் விற்பனையாளர்கள் மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Categories

Tech |