நீண்ட வரிசையில் காத்திருந்து மணமக்கள் தங்களது திருமணத்தை பதிவு செய்துள்ளனர்.
கொரோனா பெருந்தொற்றின் காரணமாக மிகவும் திருமண விழாக்கள் மிகவும் எளிமையான முறையில் நடைபெற்றன. இந்த நிலையில் பெரு நாட்டின் தலைநகரான லிமாவுக்கு அருகில் வெனீசியா மற்றும் பார்லோவென்டோ கடற்கரையில் மெகா திருமண நிகழ்ச்சி ஓன்று நடைபெற்றது. அதில் கலந்து கொண்ட மணமக்கள் நீண்ட வரிசையில் நின்று தங்களது திருமணத்தை சட்டப்படி பதிவு செய்து கொண்டனர்.
இத்தகைய நிகழ்ச்சிக்காக நாங்கள் நீண்ட தினங்களாக காத்திருந்தோம் என்று அங்கிருந்த மணமக்கள் சந்தோஷத்துடன் கூறியுள்ளனர். குறிப்பாக திருமணத்தின் பின்னர் அவர்கள் அனைவரும் ஆர்வத்துடன் கடற்கரையில் புகைப்படம் எடுத்துக்கொண்ட காட்சியானது பார்ப்பதற்கே மிகவும் அழகாக இருந்தது.