Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

நடைபெற்ற பருத்தி ஏலம்…. நீண்ட வரிசையில் காத்திருந்த வாகனங்கள்…. கலந்து கொண்ட விவசாயிகள்….!!

பருத்தி மூட்டைகளுடன் பாபநாசத்தில் நீண்ட வரிசையில் வாகனங்கள் காத்திருந்தன.

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பாபநாசம் அருகில் நடைபெற்ற பருத்தி ஏலத்தில் குறைந்த விலையை வணிகர்கள் நிர்ணயம் செய்ததால் விவசாயிகள் திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனைத்தொடர்ந்து விவசாயிகள் வணிகர்களுக்கிடையே பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இதில் பாபநாசம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் காலையில் ஏலம் நடைபெறுகிறது.

இதனை முன்னிட்டு பாபநாசம் சுற்றுவட்டார விவசாயிகள் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் கடந்த இரு நாட்களில் பருத்தி ஏலத்தில் தாங்கள் விளைவித்த பருத்தியை விற்க பாபநாசம் ஒழுங்கு முறை விற்பனை கூடத்திற்கு பருத்தி மூட்டைகளை கொண்டு வந்துள்ளனர். இதனால் ஒரு கிலோ மீட்டர் தொலைவிற்கு நீண்ட வரிசையில் வாகனங்கள் காத்திருந்தனர். இந்நிலையில் விவசாயிகளிடமிருந்து இன்று நடைபெறும் ஏலத்தில் போர்க்கால அடிப்படையில் அனைத்து பருத்திகளையும் கொள்முதல் செய்யப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Categories

Tech |