ஸ்காட்லாந்த் நாட்டில் ஒரு பெண்ணின் காருக்குள் மறைந்திருந்த நீர் நாயை விலங்குகள் நல ஆர்வலர்கள் பத்திரமாக மீட்டுள்ளார்கள்.
ஸ்காட்லாந்து நாட்டிலிருக்கும் எடின்பார்க் என்னும் ஏரிக்கரைக்கு ஒரு பெண் காரில் சென்றுள்ளார். அதன்பின் அந்தப் பெண் காரை ஏரிக்கு அருகே நிறுத்திவிட்டு சிறிது நேரம் அப்பகுதியில் நின்றுக்கொண்டு பொழுதை கழித்துள்ளார். இதனையடுத்து அந்தப் பெண் வீட்டிற்கு செல்லலாம் என்று தன்னுடைய காரை எடுக்கும்போது, திடீரென்று ஒரு விசித்திரமான சத்தம் அவருக்கு கேட்டுள்ளது.
அந்த சத்தத்தை கேட்ட அந்தப் பெண்ணிற்கு அது எங்கிருந்து வருகிறது என்று தெரியாமல் இருந்திருக்கிறது. அதன் பின் அந்தப் பெண் காரை மீண்டும் எடுப்பதற்கு முயற்சித்துள்ளார். அவர் காரை எடுத்தவுடனேயே அந்த சத்தம் மீண்டும் கேட்டுள்ளது. இதனால் அச்சமடைந்த அந்தப் பெண் காரின் என்ஜினில் ஏதேனும் கோளாறு ஏற்பட்டிருக்குமோ என்று சந்தேகமடைந்துள்ளார்.
இதனையடுத்து அவர் கார் இன்ஜினின் பேனட்டை திறந்து பார்த்தால், அதனுள் நீர் நாய் ஒன்று பயந்துபோய் இருந்துள்ளது. இதனை கண்டு அதிர்ச்சியடைந்த அந்த பெண் உடனேயே விலங்குகள் நல வாரியத்திற்கு தகவல் கொடுத்துள்ளார். இந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த விலங்குகள் நல ஆர்வலர்கள் காரிலிருந்து நீர் நாயை பத்திரமாக மீட்டு வெளியே விட்டுள்ளார்கள். இதனை அந்தப் பெண் தன்னுடைய பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.