Categories
உலக செய்திகள்

நீர்மின் திட்டம்…. அழிந்துவரும் ஜாகுவார்கள்…. அதிர்ச்சியூட்டும் தகவல்….!!!!

உலகம் முழுவதும் உள்ள அணைகளில் மேற்கொள்ளப்படும் நீர்மின் திட்டங்களால் புலிகள் மற்றும் ஜாகுவார்கள் அழிந்து வருகிறது. அதனால் அவற்றின் எண்ணிக்கை பெரிய அளவில் குறைந்துள்ளதாக ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இதுபற்றி இயற்கை பாதுகாப்புக்கான சர்வதேச ஒன்றியம் நடத்திய ஆய்வின் முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது.

அந்த ஆய்வில், ஆசியாவில் உலகின் மீதமுள்ள புலிகளில் 5-ல் ஒரு பங்கிற்கு மேல் பாதிக்கப்பட்டுள்ளதாக அதில் கூறப்பட்டுள்ளது. அதே போன்று, அமெரிக்காவின் தென்மேற்கு மற்றும் அர்ஜென்டினா இடையே பரவியுள்ள ஜாகுவாரின் எண்ணிக்கையும் பாதி அளவிற்கு மேல் குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |