கர்நாடகாவில் பெய்த கனமழையால் தென்பண்ணை ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளதால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கர்நாடக மாநிலத்தில் பெய்த கனமழை காரணமாக தென்பண்ணை ஆற்றில் நீர்வரத்து அதிகரித்து காணப்படுகிறது. தென் பண்ணை ஆற்றின் வழியாக ஓசூர் கெலவரப்பள்ளி அணைக்கு வரும் நீர்வரத்து 1,440 கன அடியாக அதிகரித்துள்ளது. அணையின் நீர்வரத்து 39.96 அடிி ஆக உள்ள நிலையில் அணையின் பாதுகாப்பு கருதி நீர்வரப்பு முழுவதும் வெளியேற்றப்படுகிறது. கரையோர மக்களுக்கு இரண்டாவது நாளாக வருவாய் துறையினர் தண்டோரா மூலம் வெள்ளம் அபாய எச்சரிக்கை விடுத்துள்ளனர்.