நீட் தேர்வு குறித்து அமைச்சர் தங்கமணி தெரிவித்த கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் நீட் தேர்வை எதிர்கொள்ள முடியாமல் நேற்று முன்தினம் மட்டும் ஒரே நாளில் 3 மாணவர்கள் தற்கொலை செய்து பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இதுகுறித்து பல திரையுலக பிரபலங்களும், அரசியல்வாதிகளும், அரசியல் கட்சிகளும் தொடர்ந்து தங்களது கண்டனங்களை பதிவு செய்து வருகின்றனர். குறிப்பாக நடிகர் சூர்யா இதற்கென்று தனியாக அறிக்கைவிட்டது தற்போது சமூக வலைதளங்களில் பேசு பொருளாக மாறி நிற்கிறது. இந்நிலையில் இது குறித்து அமைச்சர் தங்கமணி பரபரப்பு சர்ச்சை கருத்து ஒன்றை தெரிவித்துள்ளார். அதில்,
மருத்துவம் மட்டும் தான் வாழ்க்கை என மாணவர்கள் இருக்கக்கூடாது. எத்தனையோ படிப்புகள் இருக்கின்றன அவற்றில் சேரலாம் என அவர் தெரிவித்துள்ளார். நீட்தேர்வு அச்சத்தால் தற்கொலை செய்துகொண்ட மாணவர் மோதிலால் வீட்டிற்கு நேரில் சென்று ஆறுதல் தெரிவித்த அவர், உயிரிழந்த மாணவரின் குடும்பத்திற்கு நிதியுதவி கொடுப்பது குறித்து ஆலோசனை செய்வதாக கூறியுள்ளார்.
இதையடுத்து இவரது கருத்துக்கு பதில் கருத்து தெரிவித்து வருகிறார்கள். அதன்படி, மாணவர்கள் இந்தியாவின் எதிர்காலத்திற்கு மிக முக்கியமானவர்கள். அவர்களது கனவை நிறைவேற்றும் முயற்சியில் அரசு களம் இறங்க வேண்டும். கனவை நிஜமாக்க முடியாமல் வலியோடு வாழ்க்கையை கடப்பது என்பது மிகவும் வேதனைக்குரியது. அந்த வலியை தாங்க முடியாமல் தான் மாணவர்கள் தவறான முடிவை மேற்கொள்கிறார்கள்.
இனி வரக்கூடிய காலகட்டங்களில் நீட் தேர்வு குறித்தும், அதனால் மன உளைச்சல் அடையக்கூடிய மாணவர்களுக்கு தகுந்த ஆலோசனை நடவடிக்கைகள் மேற்கொள்வது குறித்தும் அரசு தீவிர நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளனர்.