Categories
மாநில செய்திகள்

NEET தேர்வுக்கு விண்ணப்பிப்போர் கவனத்திற்கு…. நாளை கடைசி நாள்…. மிஸ் பண்ணிடாதிங்க…!!!!!!!!

இந்தியாவில் மருத்துவ படிப்புகளில் சேருவதற்கு நீட் என்னும் நுழைவுத் தேர்வு கட்டாயமாக்கப்பட்டிருக்கிறது. வருடம்தோறும் பன்னிரண்டாம் வகுப்பு மதிப்பெண்கள் வெளியானவுடன் இந்தியா முழுவதும் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு மத்திய அரசின் கண்காணிப்பு நீட் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. கடந்த 2021 ஆம் வருடம்  கொரோனா  தொற்று காரணமாக நீட்தேர்வு தாமதமாக நடைபெற்றது. மேலும் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 12ஆம் தேதி நீட் தேர்வு நாடு முழுவதும் நடைபெற்றுள்ளது.

இதில் சுமார் 16 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுதியுள்ளனர். அதனையடுத்து  தேர்வு முடிவுகளும் வெளியிடப்பட்டிருந்தது. மேலும் கலந்தாய்வு மூலமாக மாநிலம் முழுவதும் மருத்துவ கல்லூரிகளில் மாணவர் சேர்க்கையும் நடைபெற்றுள்ளது. அதனைத் தொடர்ந்து நடப்பாண்டிற்கான எம்பிபிஎஸ், பிடிஎஸ் உள்ளிட்ட இளநிலை ஆகிய மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு அறிவிப்பு கடந்த மாதம் வெளியாகி உள்ளது. இதனை தொடர்ந்து ஏப்ரல் 2ஆம் தேதி நீட் தேர்வு விண்ணப்ப பதிவுகள் தொடங்கியுள்ளது.

மேலும் மே 7ஆம் தேதி வரை மாணவர்கள் neet.nta.nic.in என்ற  இணையதளம் வாயிலாக விண்ணப்பித்துக் கொள்ளலாம் என தேசிய தேர்வு முகமை  அறிவித்திருந்தது. மேலும் ஆயுதப்படை நர்சிங் கல்லூரியில் பிஎஸ்சி நர்சிங் சேர நீட் தேர்வு கட்டாயமாக்கப்பட்டிருப்பதன் காரணத்தால்  நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் கால அவகாசம் வரும் 15-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் இதுவரை சுமார் 20 லட்சம் மாணவர்கள் விண்ணப்பித்திருக்கின்றனர். மேலும் கொடுக்கப்பட்ட கால அவகாசம் நாளையுடன் முடிவடைகிறது. நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க நாளை கடைசி நாளாகும். இந்த நிலையில் நாடு முழுவதும் ஜூன் 15ஆம் தேதி நீட்தேர்வு நடைபெற இருக்கின்றது குறிப்பிடத்தக்கதாகும். நடப்பாண்டு நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நேரம் போன்றவை நீட்டிக்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கதாகும்.

Categories

Tech |