Categories
தேனி மாவட்ட செய்திகள்

“நீட் தேர்வு ஆள்மாறாட்டம்” விசாரணையில் கிடைத்த பகிர் தகவல்…. சிக்கிய இரு மாநிலங்கள்…!!

நீட் பொதுத்தேர்வு ஆள்மாறாட்ட வழக்கில் தமிழகத்தைப் போலவே பீகார் மற்றும் குஜராத் மாநிலங்களிலும் ஆள்மாறாட்டம் நடைபெற்றது தெரியவந்துள்ளது.

நீட் பொதுத் தேர்வில் ஆள் மாறாட்டம் செய்து தேனியில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரியில் உதித் சூர்யா என்பவர் சேர்ந்தார். இதனால் உதித் சூர்யா மற்றும் அவருடைய தந்தை டாக்டர் வெங்கடேசன் ஆகியோர் கடந்த 2019ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டார்கள். இதனை தொடர்ந்து ஆள்மாறாட்ட வழக்கில் 4 மாணவர்கள் 2 மாணவிகள் பெற்றோர்கள் 6 பேர் புரோக்கர்கள் 3 பேர் என 17 பேர் மொத்தமாக கைது செய்யப்பட்டார்கள்.

இதில் முக்கிய ஏஜென்டான கேரளாவை சேர்ந்த ரசித் என்பவர் ஓராண்டுக்கு மேலாக தலைமறைவாக இருந்தார். இவர் கடந்த 7ஆம் தேதி தேனி நீதிமன்றத்தில் சரணடைந்தார். அவரை சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வந்தார்கள். நேற்று மாலை வரை விசாரனைக்கு அனுமதி இருந்த நிலையில் அவரை போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினார்கள். வரும் 21ஆம் தேதி காலை நீதிமன்ற காவல் முடிந்து மீண்டும் அவரை ஆஜர்படுத்த மாஜிஸ்ட்ரேட் பன்னீர்செல்வம் உத்தரவிட்டார். இதனைத் தொடர்ந்து அவர் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

சிபிசிஐடி போலீஸ் விசாரணை நடத்துவதில் ரஷித் என்பவர் பெங்களூரில் தங்கியிருந்தபோது பீகார் பகுதியை சேர்ந்த புரோக்கர் தீபக் என்பவருடன் அவருக்குத் தொடர்பு ஏற்பட்டுள்ளது. அதைப்போலவே குஜராத் மாநிலத்தை சேர்ந்த பிரகாஷ் என்பவரும் நீட் பொதுத்தேர்வில் ஆள்மாறாட்டத்தில் ஈடுபட்டு வந்துள்ளார். மருத்துவக் கல்லூரியில் சேர ஆர்வமுடைய மாணவர்களிடம் பணத்தை பெற்றுக்கொண்டு அவர்களுக்கு பதிலாக வேறு நபர்களை தேர்வு எழுத வைத்து முறைகேடு செய்துள்ளார்.

இதனால் பீகார் மற்றும் குஜராத் மாநில புரோக்கர்களுக்கும் நீட் பொதுத்தேர்வு ஆள்மாறாட்ட வழக்கில் தொடர்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தை போலவே பீகார் மற்றும் குஜராத்திலும் நீட் தேர்வில் ஆள் மாறாட்டம் நடந்திருக்க வேண்டும் என சிபிசிஐடி போலீசார் சந்தேகித்தனர். ரசீதுடன் தொடர்பில் இருக்கும் புரோக்கர்களை வைத்து ஆள்மாறாட்டம் செய்து தேர்வு எழுதியவர்களை தேடும் பணியில் அடுத்தகட்டமாக போலீசார் திரும்பியுள்ளனர்.

Categories

Tech |