ஒடிசாவில், பானி புயலால், நீட் நுழைவுத் தேர்வு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
தேசிய அளவில், இளநிலை மருத்துவ பட்டப் படிப்புகளில் சேர நடத்தப்படும் நீட் நுழைவுத் தேர்வு மே 5-ஆம் தேதி நடக்க உள்ள நிலையில், நீட் தேர்வுகளை ஒத்திவைக்க வேண்டும் என்று ஒடிசா மாநில அரசு கேட்டுக் கொண்டது.
பானி புயலால் கடும் சேதம் ஏற்பட்டுள்ள நிலையில், இதை ஏற்று நாளை ஒடிசாவில் நடைபெற உள்ள நீட் தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது என தேசிய தேர்வுகள் முகமை தெரிவித்துள்ளது. தேர்வு நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது .