Categories
கல்வி

NEET, JEE EXAM: அரசு பள்ளி மாணவர்களுக்கான இலவச பயிற்சி வகுப்புகள்…. பள்ளிக்கல்வித்துறை வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!!!!!

தமிழ்நாடு பள்ளி கல்வித்துறை ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டிருப்பதாவது, தமிழகத்தில் ஒவ்வொரு வருடமும் அரசு நடத்தப்படும் போட்டி தேர்வுகளில் மாணவர்கள் பங்கு கொள்வதற்காக அரசு பள்ளிகளில் படிக்கும் 11 மற்றும் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்படும். அந்த வகையில் நடப்பாண்டில் நீட் மற்றும் ஜேஇஇ தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் தொடங்கப்பட இருக்கிறது. இந்த பயிற்சி வகுப்புகள் நவம்பர் 3-வது வாரத்தில் சனிக்கிழமையில் இருந்து தொடங்கப்பட இருக்கிறது.

இதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் தற்போது வழங்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள ஒன்றியங்களுக்கு ஏற்ப 412 பயிற்சி மையங்கள் செயல்படுகிறது. இவற்றில் தமிழ் வழி மற்றும் ஆங்கில வழி என தனித்தனியாக இருப்பதால் மாணவர்கள் தங்களுடைய பயிற்று மொழிக்கு முடித்து ஏற்ப தேர்வு செய்து படித்துக் கொள்ளலாம். அதன் பிறகு போட்டித் தேர்வில் பங்கு பெற விரும்பும் 12-ம் வகுப்பு மாணவர்கள் 11-ம் வகுப்பில் எடுத்த மதிப்பெண்கள் அடிப்படையிலும், 11-ம் மாணவர்கள் 10-ம் வகுப்பில் எடுத்த மதிப்பெண்கள் அடிப்படையிலும் தேர்வு செய்யப்படுவார்கள்.

இதில் ஓசி மற்றும் ஓபிசி பிரிவை சேர்ந்த மாணவர்கள் பொதுத்தேர்வில் 60% மதிப்பெண்ணும், எஸ்சி, எஸ்டி, பிஎச் பிரிவை சேர்ந்த மாணவர்கள் பொதுத் தேர்வில் 50% மதிப்பெண்ணும் எடுத்திருக்க வேண்டும். இதனையடுத்து ஒரு ஒன்றியத்தில் 12-ம் வகுப்பு மாணவர்களில் 50 பேரும், 11-ம் வகுப்பு மாணவர்களில் 20 மாணவர்களும் தேர்வு செய்யப்படுவார்கள். இவர்களுக்கு பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் பாடங்களை சொல்லிக் கொடுப்பார்கள்.

இதைத்தொடர்ந்து பயிற்சி மையங்களில் வருகை பதிவேடு, மதிப்பெண் பதிவேடு போன்றவற்றை மாணவர்கள் கட்டாயம் பின்பற்ற வேண்டும். மேலும் பயிற்சி மையங்களில் சேரும் மாணவர்கள் குறித்த விவரங்களை சேகரித்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள், தலைமை ஆசிரியர்கள் மற்றும் தலைமை ஆசிரியர்களுக்கு வழிகாட்டுமாறு கூறி சுற்றறிக்கையும் விடப்பட்டுள்ளது.

Categories

Tech |