மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.
நீட் எனப்படும் மருத்துவ படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வு கடந்த செப்டம்பர் மாதம் 13-ஆம் தேதி நாடு முழுவதும் நடைபெற்றது. கொரோனா அச்சம் காரணமாக நீட் தேர்வை தவறவிட்ட மாணவர்களுக்கு உச்சநீதிமன்ற உத்தரவுப்படி கடந்த 14ஆம் தேதி தேர்வு நடத்தப்பட்டது. தேர்வு முடிவுகள் இன்று மாலை வெளியிடப்பட்டுள்ளது. ntaneet.nic.in என்ற இணையதள முகவரியில் மாணவர்கள் தங்களது முடிவுகளை பார்க்கலாம்