Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

நீட் தேர்வுக்கு தயாராகி வந்த மாணவர் தற்கொலை – உறவினர்கள் சாலை மறியல்…!!

நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி அரியலூரில்  தற்கொலை செய்து கொண்ட மாணவரின் உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள எலந்தங்குடி கிராமத்தை சேர்ந்த விக்னேஷ் என்ற மாணவன் நீட் தேர்வுக்கு பயிற்சி பெற்று வந்தார். வருகின்ற ஞாயிற்றுக்கிழமை நீட் தேர்வு எழுத இருந்த நிலையில் கிணற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்டார். மாணவரின் உடலை கைப்பற்றி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் எலந்தங்குடி கிராமத்தில் செந்துறை ஜெயங்கொண்டம் சாலையில் மாணவன் தற்கொலைக்கு காரணமான நீட் தேர்வை  உடனடியாக  ரத்து செய்ய வேண்டும் எனவும் மாணவர்கள் நலனில் அக்கறை கொள்ளாத மத்திய மாநில அரசுகளை கண்டித்தும் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

Categories

Tech |