நீதிமன்றத்தின் நியாயமான உத்தரவுகளை தாழ்மையுடன் ஏற்றுக் கொள்வதாக நடிகர் சூர்யா தெரிவித்துள்ளார்.
நீதிமன்ற நடவடிக்கைகளை விமர்சித்து நடிகர் சூர்யா அறிக்கை வெளியிட்டு விவகாரத்தில் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை அவசியம் இல்லை என தலைமை நீதிபதி அமர்வு உத்தரவிட்டது. அதேநேரம் கொரோனா காலத்தில் நீதிமன்ற பணியை அறிந்து கொள்ளாமல் விமர்சிப்பது சரி இல்லை என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இந்நிலையில் இது குறித்து டுவிட்டரில் பதிவிட்டுள்ள நடிகர் சூர்யா, இந்திய நீதித்துறையின் மீது மிகுந்த நம்பிக்கை வைத்து உள்ளதாகவும், தான் எப்போதும் நீதித்துறையை மிக உயர்ந்த இடத்தில் வைத்து இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். நீதிமன்றம் மக்களின் அரசியலமைப்பு உரிமைகளை நிலை நிறுத்துவதற்கான ஒரே நம்பிக்கை என்றும் அதன் நியாயமான உத்தரவுகளை தாழ்மையுடன் ஏற்றுக்கொள்வதாகவும் பதிவிட்டுள்ளார்.