பிரபல வங்கியில் பணப் பரிவர்த்தனைக்கான கட்டணத்தை உயர்த்த போவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இந்தியாவில் பஞ்சாப் நேஷனல் வங்கி மிகப்பெரிய பொதுத்துறை வங்கியாக செயல்பட்டு வருகிறது. இந்த வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு NEFT, RTGS போன்ற சேவைகளை வழங்கி வருகிறது. அதாவது இந்தியாவில் தற்போது அனைத்து சேவைகளும் டிஜிட்டல் சேவையாக மாறிவரும் நிலையில், ஆன்லைன் மூலமாக வீட்டில் இருந்தபடியே பண பரிவர்த்தனைகளை செய்து வருகின்றனர். அந்த வகையில் தற்போது அனைத்து வங்கிகளிலும் NEFT, RTGS வாயிலாக பண பரிவர்த்தனை செய்வதற்கான சேவைகளை வாடிக்கையாளர்களுக்கு வழங்கி வருகிறது.
இதற்கு வங்கிகளில் குறைந்த கட்டணம் வசூலிக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது கட்டணம் உயர்ந்துள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதனால் பஞ்சாப் நேஷனல் வங்கியும் NEFT, RTGS உள்ளிட்ட சேவைகளுக்கு கட்டணத்தை உயர்த்த உள்ளதாக அறிவித்துள்ளது. அதன்படி 10,000 முதல் 1 லட்சம் ரூபாய் வரைக்கு 4.75 ரூபாயும், 1 முதல் 2 லட்சம் ரூபாய்க்கு 14.75 ரூபாயும், 2 லட்சம் ரூபாய்க்கு மேல் 24.75 ரூபாயும் உயர்த்தப்பட்டுள்ளது. மேலும் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வால் பாதிக்கப்பட்ட மக்கள் வங்கியின் இந்த நடவடிக்கையால் அதிர்ச்சிக்கு ஆளாகியுள்ளனர்.